கோலாலம்பூர்: தொழிலாளர்களுடன் தங்களின் இலாபத்தைப் பகிர்ந்து கொள்ள முதலாளிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மனிதவள துணை அமைச்சர் மாஹ்புஸ் உமார் தெரிவித்தார்.
இன்றைய 1,100 ரிங்கிட் உடன் ஒப்பிடும்போது, முக்கிய நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மாதத்திற்கு 1,200 ரிங்கிட்டா உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப இந்த கோரிக்கை அமைந்துள்ளது.
“என்னைப் பொறுத்தவரை, பரந்த பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை நம் நாட்டோடு பகிர்ந்து கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” என்று அவர் கூறினார்.
முதலாளிகள் அல்லது தொழிலாளர்களுக்கு சுமை ஏற்படாத காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
உண்மையில், இது அனைத்து மாகாணங்களிலும் செயல்படுத்தப்படவில்லை, ஆனால் ஒரு பெரிய நகரத்தின் ஒரு பகுதி மட்டுமே அதிகரிப்பில் ஈடுபடும்.
இவ்வாண்டு ஜனவரி முதல், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு 1,100 ரிங்கிட்டாக உயர்த்தியது. அதன் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஊதியத்தை படிப்படியாக 1,500-ஆக உயர்த்துவதாக அது குறிப்பிட்டிருந்தது.