Home One Line P2 பொன்னியின் செல்வன்: கதாபாத்திரங்களின் நடிகர்கள் தேர்வு உண்மைதானா? உறுதியான தகவல்கள் இல்லை!

பொன்னியின் செல்வன்: கதாபாத்திரங்களின் நடிகர்கள் தேர்வு உண்மைதானா? உறுதியான தகவல்கள் இல்லை!

1053
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் மணிரத்னம் நீண்ட நாட்களாக கல்கியின்பொன்னியின் செல்வன்நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அது நனவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் இத்திரைப்படத்தினை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகள் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ். ஐஷ்வாயா ராய் மேலும் மலையாள நடிகர் ஜெயராம், பார்த்திபன், அமலா பால், ஐஷ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆயினும், நடிகர் ஜெயராம், ஐஷ்வர்யா ராய் இருவரைத் தவிற வேறு எந்த நடிகரும் இதனை உறுதி செய்யவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தற்போது, பழுவேட்டரையர் வேடத்துக்கு  நடிகர் பிரபு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த பாத்திரத்திற்குத் தேர்வான நடிகர் சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும், இது குறித்தும் இயக்குனர் மணிரத்னம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.