Home One Line P2 சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிடில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்!

சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிடில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்!

1088
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: பயங்கரவாத பிரச்சனைகளால் உலக நாடுகளின் எதிர்ப்புகளை பாகிஸ்தான் அரசு மீண்டும் எதிர் நோக்கி வருகிறது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பதோடு பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் வருகிற 2020 ஆண்டுக்குள் நிலையான முன்னேற்றத்தை காணாவிட்டால், அது கருப்புப் பட்டியலில் சேர வேண்டிய நிலை ஏற்படும் என்று எப்ஏடிஎப் எச்சரித்துள்ளது.

எப்ஏடிஎப் என்பது பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க, நிதி செயல்பாடுகளை கண்காணிக்க ஜி7 அமைப்பு உருவாக்கிய குழுவாகும்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கும் விவகாரத்தில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை. அந்நாட்டின் புதிய அரசாங்கம், சிறிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்திருந்தாலும்,  முக்கிய விஷயங்களில் அவர்கள் கூறியதை செய்யவில்லை. அவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதையும் வேகமாக செய்ய வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்என்று சீனாவின் எப்ஏடிஎப் தலைவர் சியாங்மின் லியு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 40 விவகாரங்களில், அது ஒன்றை மட்டுமே செய்து முடித்துள்ளதாக அவர் கூறினார். நட்பு நாடான சீனாவும் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்புவது, அந்நாட்டின் நிலைத்தன்மையை மேலும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.