Home One Line P2 இரண்டாவது முறையாக பிரதமராகும் ஜஸ்டின் டுருடோ!

இரண்டாவது முறையாக பிரதமராகும் ஜஸ்டின் டுருடோ!

1101
0
SHARE
Ad

தொராண்டோ: இரண்டாவது முறையாக ஜஸ்டின் டுருடோ கனடாவின் பிரதமாகிறார் என்ற செய்தியை அந்நாட்டின் செய்தி நிறுவனமான சிபிசி வெளியிட்டுள்ளது. 

ஆயினும், ஜஸ்டின் தலைமையிலான அரசாங்கம் இதர கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கனடாவின் 43-வது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், லிப்ரல் கட்சி ஆதரவாளர்கள் ஜஸ்டினின் இந்த வெற்றியை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை நடந்த வாக்களிப்பில், லிப்ரல் கட்சியினர் 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தேவையான 170 இடங்களை விட லிப்ரல் கட்சிக்கு இது மிகக் குறைவான வெற்றியாகக் கருதப்படுகிறது.