கோத்தா கினபாலு: பெலூரானில் கண்டெடுக்கப்பட்ட பிக்மி யானை மரணம் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் பொது மக்கள் காவல் துறையிடம் முன்வைக்குமாறு புக்கிட் அமான் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆக கடைசி தகவலின்படி அந்த யானையின் மீது ஐந்து துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்ததாகவும், சந்தேக நபர்களை இன்னும் வேட்டையாடப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் தெரிவித்தது.
இதற்கிடையே, அந்த யானையின் தந்தங்களும் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகை யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை சபா வனவிலங்கு துறை இயக்குநர் அகஸ்டின் துகா கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
கடந்த மாதம், தாவாவில் 70 துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பிக்மி யானை இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத வேட்டையாளர்களால் அதன் தந்தங்கள் அகற்றப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.