
கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டு முதல் 2019 ஜூன் வரையிலும் நாடு முழுவதும் மொத்தம் 356 தற்கொலை வழக்குகள் பதிவாகி உள்ளதாக மக்களவையில் இன்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்த எண்ணிக்கையில் குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட 69 வழக்குகளும் உள்ளன என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
“இந்த சிக்கலை தீர்க்க, சுகாதார அமைச்சகம் 60 மனநல மருத்துவமனைகள், 1,001 ஆரம்ப சுகாதார மருந்தகங்கள் மற்றும் 25 மனநல சமூக மையங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சின் கீழ், 400 மனநல மருத்துவர்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை ஆலோசனைகளை வழங்கக்கூடிய 298 குடும்ப மருத்துவ நிபுணர்கள் இருப்பதாக டாக்டர் லீ கூறினார்.