கொலையுதிர் காலம்
பிரிட்டன் பணக்காரர் ஒருவரின் மனைவியான அபா லாஸன், இந்தியாவில் ஆதரவற்றோர் அமைப்பு ஒன்றிலிருந்து குழந்தையைத் தத்தெடுத்து தான் சாகும் தருவாயில் எஸ்டேட், மாளிகை உள்ளிட்ட அனைத்து சொத்துகளை அந்தக் குழந்தைக்கே எழுதி வைக்கிறார். அந்தச் சொத்துகளை ஏற்றுப் பராமரிக்க இங்கிலாந்திற்கு வருகிறார் நயன்தாரா.
அபா லாஸனின் அண்ணன் மகன் நயன்தாரா இடம் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு, சொத்தைத் தன்னிடம் கொடுத்துவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்கிறார். ஆனால், அதனை மறுத்துவிடுகிறாள்.
ஒரு நாள் மாளிகைக்கு மர்ம மனிதன் ஒருவன் மாளிகையில் இருக்கும் அனைவரையும் கொன்றுவிடுகிறான். அவனிடமிருந்து நயன்தாரா எப்படித் தப்புகிறார், யார் அந்த மனிதனை அனுப்பியது என்பது இப்படத்தின் கதையாகும்.
நேர்கொண்ட பார்வை
சுதந்திரமாக தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையைச் சந்தோஷமாக ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் நண்பர்களுடன் அறையில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் ஷ்ரத்தாவிடம் தவறாக நடக்க, அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அதன் பிறகு, அவர்களுக்குத் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட பதிக்கப்பட்ட அந்த ஆடவர் அவர்களில் மீது வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை அஜித்தே எடுக்கும் நிலை வர, அதன் பின் அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் கதையாகும்.
இவ்விரு திரைப்படங்களைத் தற்போது அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் வாங்கி கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, இத்திரைப்படத்தை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு களிக்கலாம்.
அண்மையில் அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஒளியேறிய ரேவதியும், ஜோதிகாவும் இணைந்து நடித்த ஜாக்பாட், பிரபு மற்றும் தமன்னா நடித்த தேவி 2, சூர்யாவின் என்ஜிகே, உள்ளூர் திரைப்படங்களான அழகிய தீ மற்றும் குற்றம் செய்யேல் ஆகிய திரைப்படங்களைத் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு மகிழலாம்.
மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையத் தளத்தை வலம் வரலாம்.