Home One Line P1 குறைவான வருமானம் ஈட்டும் இந்தியர்கள் அரசாங்கத்தையே நம்பி இருக்கக் கூடாது!- சேவியர் ஜெயகுமார்

குறைவான வருமானம் ஈட்டும் இந்தியர்கள் அரசாங்கத்தையே நம்பி இருக்கக் கூடாது!- சேவியர் ஜெயகுமார்

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய மக்கட்தொகையில் சுமார் 70 விழுக்காட்டு பேர் இன்னும் வறுமை மட்டத்திற்கு கீழே உள்ளனர் என்றும், அவர்களின் குடும்ப வருமானம் 3,000 ரிங்கிட்டுக்கு மேல் இல்லை என்றும் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதனை, ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, இந்திய சமூகம் அரசாங்க உதவியையே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியர்கள் வணிகத்திலும், தனியார் துறை வாய்ப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்திய மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் சேவியர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எங்கள் (இந்திய) மக்கள் தொகை மிகக் குறைவு. ஏழு சதவீதம் மட்டுமே. எதிர்காலத்தில் இது குறையும். இருப்பினும், இந்த சிறிய தொகையில் 70 விழுக்காட்டு மக்கள் வீட்டு வருமானமாக மாதம் 3,000-க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகளையே நம்ப முடியாது என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டாம். தனியார் துறையில் பல வாய்ப்புகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் சலவை துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நமது இளைஞர்கள் இதன் மூலம் பயனடைய வேண்டும். முடிதிருத்தும் வணிகத்தை அமைப்பதில் என்ன தவறு?” என்று அவர் கூறினார்.

பிகேஆர் உதவித் தலைவருமான சேவியர் கூறுகையில், ஓர் இந்தியத் தலைவராக, இந்திய மக்கள் நம்பிக்கைக் கூட்டணீ மீதுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொண்டேன் என்று அவர் கூறினார்.

நீங்கள் (இந்தியர்கள்) அதிக எதிர்பார்ப்புகளுடன் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பதை நாங்கள் அறிவோம். நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், உங்கள் எதிர்பார்ப்புகளை  குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த நாள் எல்லாவற்றையும் மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டாம். அதற்கு நேரம் எடுக்கும். நாங்கள் பல்வேறு முயற்சிகளையும் செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.