Home One Line P2 அஸ்ட்ரோ தங்கத் திரை-விண்மீன் அலைவரிசைகளில் துல்லிய ஒளிபரப்பில் சிறந்த திரைப்படங்கள்

அஸ்ட்ரோ தங்கத் திரை-விண்மீன் அலைவரிசைகளில் துல்லிய ஒளிபரப்பில் சிறந்த திரைப்படங்கள்

940
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை தனது அலைவரிசைகளில் ஒளிபரப்பி வரும் அஸ்ட்ரோ, துல்லிய ஒளிபரப்புக்காக ஒதுக்கியிருக்கும், விண்மீன், தங்கத் திரை ஆகிய இரண்டு அலைவரிசைகளிலும் சில சிறந்த திரைப்படங்களை ஒளியேற்றவிருக்கிறது.

துல்லிய ஒளிபரப்பில் தீபாவளி சிறப்பு திரைப்படங்களாக அஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி அலைவரிசையில் ‘சிந்துபாத்’ திரைப்படமும் மற்றும் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசையில் மான்ஸ்டர், 2.0, நட்பே துணை மற்றும் அய்ரா ஆகிய படங்களை துல்லிய ஒளிபரப்பில் இவ்வாண்டு தீபாவளிக்குக் கண்டு மகிழலாம்.

சிந்துபாத் (26/10/2019)

அஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 9 ஒளியேறும் இத்திரைப்படத்தில் ஒரு நாள் அஞ்சலி தாய்லாந்தில் எங்கோ சிக்கிவிட்டதாக விஜய் சேதுபதியிடம் போனில் பேசுகிறார். மனைவியைத் தேடி செல்லும் விஜய் சேதுபதி அவரை கண்டுபிடித்து மீட்டாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதையாகும்.

மான்ஸ்டர் (27/10/2019)

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), அக்டோபர் 27-ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஒளியேறும் மான்ஸ்டர் திரைப்படத்தில், நகைக் கடையில் வேலை செய்யும் பிரியா சந்தேகத்திற்கிடமான வைரத்தால் போலீசில் சிக்குகிறார். அதே வேளையில் வீட்டில் இருக்கும் ஒரு எலி ஒன்று செய்யக்கூடாத அட்டகாசம் செய்ய எஸ்.ஜே.சூர்யா எப்படி அதை சமாளிக்கிறார்? சந்தேகமான வைரம் எப்படி வந்தது? எலி என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் சுவாரசியமான கதையாகும்.

2.0 (27/10/2019)

அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), அக்டோபர் 27-ஆம் தேதி – அதாவது தீபாவளி தினத்தன்று இரவு 10.00 மணிக்கு ஒளியேறுகிறது 2.0 திரைப்படம்.

செல்போன் தொழில்நுட்பம் குறித்த தகவல்களும், அதன் பலன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நட்பே துணை (28/10/2019)

அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), அக்டோபர் 28-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ஒளியேறுகிறது, நட்பே துணை என்ற திரைப்படம்.

ஹாக்கி விளையாட்டையும், விளையாட்டு மைதானத்தையும் கார்பரேட் நிறுவனத்திடம் இருந்து ஆதி தனது அணி நண்பர்களுடன் இணைந்து எப்படி எதிர் கொள்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

அய்ரா (28/10/2019)

அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு ஒளியேறுகிறது அய்ரா திரைப்படம்.

இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.