Home One Line P2 பிகில் : முதல் நாளில் 250 மில்லியன் ரூபாய் வசூல்

பிகில் : முதல் நாளில் 250 மில்லியன் ரூபாய் வசூல்

1179
0
SHARE
Ad

சென்னை – மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று வெள்ளிக்கிழமை உலக அளவில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தின், தமிழகத்திற்கான முதல் நாள் வசூல் மட்டும் 250 மில்லியன் ரூபாயைத் தாண்டியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விஜய் நடித்த முந்தைய படமான ‘சர்கார்’ படத்தின் முதல் நாள் வசூலான 315 மில்லியன் ரூபாய் வசூலை பிகில் முறியடிக்க இயலவில்லை. சர்கார் படமே தமிழ்ப் படங்களில் முதல் நாள் வசூல் சாதனையில் முன்னணி வகிக்கிறது.

நேற்று பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி படத்திற்கும் பெரும் வரவேற்பு இருந்த காரணத்தால் பிகில் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும், பெண்கள் முன்னேற்றம், காற்பந்து ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும் பிகில் படம் சிறப்பாக இருக்கிறது என தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களால், பிகில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அதிகமாக வசூல் செய்து சாதனைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் தந்தை – மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பிகில்’ நேற்று வெள்ளிக்கிழமை மலேசியாவிலும் வெளியாகியுள்ளது.

சரி! ‘பிகில்’ படம் எப்படி இருக்கிறது?

இந்தப் படத்தின் விரிவான விமர்சனத்தை நாளை செல்லியலில் காணலாம்.