Home One Line P2 அமேசோனை வீழ்த்தி அமெரிக்க இராணுவத்தின் 10 பில்லியன் குத்தகையைப் பெற்ற மைக்ரோசோப்ட்

அமேசோனை வீழ்த்தி அமெரிக்க இராணுவத்தின் 10 பில்லியன் குத்தகையைப் பெற்ற மைக்ரோசோப்ட்

974
0
SHARE
Ad

வாஷிங்டன் – பெண்டாகான் எனப்படும் அமெரிக்க இராணுவம் வழங்கவிருக்கும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கிளவுட் கம்ம்யூட்டிங் (cloud computing) குத்தகையைப் பெற உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டியிட்டன.

இதில் உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் இணைய வணிக நிறுவனமான அமேசோனைத் தோற்கடித்து அந்தக் குத்தகையை மைக்ரோசோப்ட் நிறுவனம் பெற்றிருப்பது அமெரிக்க வணிக வட்டாரங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது எல்லா ஆவணங்களையும், தரவுகளையும் கணினியில் மட்டும் சேமித்து வைக்காமல், அதன் முக்கியத்துவம், அளவுக்கதிகமான கொள்ளிடம் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு, கிளவுட் எனப்படும் பிரத்தியேக வான்வெளி போன்ற அகண்ட சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கும் தொழில்நுட்ப முறையாகும்.

அமேசோன், மைக்ரோசோப்ட் இரண்டுமே உலகின் முதல் நிலை பணக்காரர்கள் இருவரால் வழிநடத்தப்படும் நிறுவனங்களாகும்.
அமேசோன் ஜெப் பெசோஸ் என்பவராலும், மைக்ரோசோப்ட் பில் கேட்சாலும் நடத்தப்படும் நிறுவனங்களாகும். நீண்ட காலமாக உலகின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்துடன் இருந்த பில் கேட்ஸ் அண்மையில் அந்த முதல் நிலை இடத்திலிருந்து ஜெப் பெசோசால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார்.