Home One Line P2 சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு, அதிமுக சார்பில் தலா 10 இலட்சமும், திமுக சார்பில் 10...

சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு, அதிமுக சார்பில் தலா 10 இலட்சமும், திமுக சார்பில் 10 இலட்சமும் வழங்கப்பட்டது!

868
0
SHARE
Ad

திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில், 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதி தரப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், அதிமுக சார்பில், 10 இலட்ச ரூபாய் நிவாரணம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து 10 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளார்.

இருக்கின்ற எல்லா தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தித்தான் குழந்தையை உயிருடன் மீட்கப் போராடியதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஆயினும், எவ்வளவு போராடியும் சிறுவனைமீட்கமுடியவில்லைஎன்பதுதமக்கு மிகுந்தவேதனையை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இனிமேல், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழனிசாமி நிருபர்களிடம் உறுதியளித்துள்ளார்.