கோலாலம்பூர்: தேடப்படும் ஜோ லோ எனும் சர்ச்சைக்குரிய தொழிலதிபரை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மலேசியா ஒருபோதும் கைவிடாது என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
ஜோ லோவை தேடும் நடவடிக்கை நிறுத்தப்படாது என்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் கண்டுபிடிக்கப்படுவார் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அவர் எப்போது கொண்டு வரப்படுவார் என்பது கூற இயலாது. எதுவாக இருந்தாலும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கிறோம். அனைத்துலக காவல் துறையினருடன் தேடும் நடவடிக்கை நடைபெறுகிறது. எதுவாக இருந்தாலும் காத்திருப்போம், ” என்று நேற்று திங்கட்கிழமை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
“அனைத்துலக காவல் துறையுடன் ஒத்துழைப்பு உயர்த்தப்பட்டு, சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டாலும், ஜோ லோ எங்கே இருக்கிறார் என்பதைப் பற்றி நாம் அறியக்கூடிய சிறிய தகவல்கள் இருந்தாலும், அது ஜோ லோ இருக்கும் நாட்டின் ஒத்துழைப்பு பெறாவிட்டால், நடவடிக்கை எடுப்பது கடினம்.”
“நாங்கள் இன்னும் முயற்சி செய்கிறோம். எப்படியிருந்தாலும், அவர் மலேசியாவில் நீதிமன்றத்தின் முன் அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்படுவார்” என்று அவர் கூறினார்.
அண்மையில், ஜோ லோ சைப்ரஸின் குடியுரிமையைப் பெற்றதாகக் கூறப்பட்டது.