Home One Line P1 பிக்மி யானை: கணுக்கால்கள் வெட்டப்பட்ட நிலையில், 30 விழுக்காடு உடல் பாகங்கள் மட்டுமே மீட்பு!

பிக்மி யானை: கணுக்கால்கள் வெட்டப்பட்ட நிலையில், 30 விழுக்காடு உடல் பாகங்கள் மட்டுமே மீட்பு!

774
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கினாபாத்தாங்கான் ஆற்றில் மிதந்து கிடந்த பிக்மி யானையின் பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை மாலை நிறைவடைந்தது.

சபா வனவிலங்கு துறை இயக்குனர் அகஸ்டின் துகா கூறுகையில், பிரேத பரிசோதனையின் போது, யானையின் உடலில் 30 விழுக்காடு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

இடுப்பு முதல் வால் பகுதியும், இடது மற்றும் வலது முன் கால்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இருப்பினும், யானையின் கணுக்கால்கள் வெட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், யானையின் முதுகில் தோல் உள்ளது. இதற்கிடையில், மீதமுள்ள உறுப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று அவர் திங்களன்று ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிக்மி யானையின் சடலம் கினாபாத்தாங்கான் ஆற்றில் மிதந்து கிடந்ததைக் கண்டு கண்டுபிடிக்கப்பட்டது, பொதுமக்களால் ஆற்றின் ஓரம் இழுக்கப்பட்டது.

இவ்வாண்டில் சபா மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்றாவது யானையின் சடலம் இதுவாகும்.

இதற்கிடையில், பிக்மி யானையின் உடலின் இரண்டு கணுக்கால்கள் கூர்மையான பொருட்களால் வெட்டப்பட்டிருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

கினாபாத்தாங்கான் மாவட்ட காவல் துறைத் தலைவர் துல்பாஹரின் இஸ்மாயில் கூறுகையில், பிரேத பரிசோதனையில் எந்த வகையான சாதனம் பயன்படுத்தப்பட்டது என்பதை தீர்மானிப்பது கடினம் என்றும், விலங்கு இறப்பதற்கு முன் அல்லது அதற்குப் பிறகு செய்யப்பட்டதா என்றும் தற்போதைக்கு கூற இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

யானையின் இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும், யானையின் தசை மற்றும் தோலில் இருந்து நான்கு செல் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1997-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் முழு பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் மறுவகைப்படுத்தப்படும்என்று அவர் கூறினார்.