Home One Line P1 சபா: 3-வது பிக்மி யானையின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு!

சபா: 3-வது பிக்மி யானையின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு!

788
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கம்போங் பூத்தே அருகே கினாபாத்தாங்கான் ஆற்றில் மேலும் ஒரு பிக்மி யானை சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சபா வனவிலங்குத் துறை இயக்குனர் அகஸ்டின் துகாவை அஸ்ட்ரோ அவானி தொடர்பு கொண்டபோது இச்சம்பவத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

பிரேத பரிசோதனை செய்வதற்காக யானையின் சடலத்தைப் பெற சபா வனவிலங்கு துறையைச் சேர்ந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொதுமக்களிடமிருந்து இது தொடர்பான புகார் அறிக்கைகள் கிடைத்ததாகவும், வனவிலங்குத் துறை அதிகாரிகள் குழு அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் யானையின் சடலம் மிதப்பதைக் பார்த்துள்ளார்கள். அவர்கள் அச்சடலத்தை ஆற்று கரையோரம் இழுக்க உதவினார்கள். இருப்பினும், இதுவரை நாங்கள் கள ஆய்வாளர்களிடமிருந்து எந்த ஆய்வு முடிவுகளையும் பெறவில்லை,” என்று அவர் நேற்று கூறினார்.

ஆற்றில்  மிதந்துக் கொண்டிருக்கையில் கண்டெடுக்கப்பட்ட யானை எப்போது, ​​எங்கே இறந்தது என்பதை தீர்மானிக்க கடினமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். ஆயினும், அவ்வப்போது விசாரணையின் முன்னேற்றத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக இம்மாதிரியான யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி, பிக்மி யானையின் சடலம் தாவாவ்விலும், அக்டோபர் 19-ஆம் தேதின்று பெலூரானில் உள்ள ஒரு எண்ணெய் பனை தோட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன.