Home One Line P1 மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு – 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்

மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு – 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்

1195
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (கூடுதல் தகவல்களுடன்) இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 3.00 முதற்கொண்டு பிற்பகல் 4.00 மணிவரை தேசிய மஇகா புத்ரா உலக வாணிப மையத்தில் நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களோடு, சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய இந்த விருந்துபசரிப்பில், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலு, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், அம்னோ தலைவரும், தேசிய முன்னணி தலைவருமான சாஹிட் ஹமிடி, அம்னோ தலைமைச் செயலாளர் இஸ்மாயில் சப்ரி, முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன், மசீச தலைவர் வீ கா சியோங், பாஸ் கட்சித் தலைமைச் செயலாளர் தக்கியுடின், ஏனைய பாஸ் தலைவர்கள், தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாஹிட்டை வரவேற்கும் விக்னேஸ்வரன்

நாடு முழுமையிலும் இருந்து ஏராளமான மஇகா தலைவர்களும் இந்த திறந்த இல்ல விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

விருந்துபசரிப்பிற்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், எங்களின் கணக்கெடுப்பின் படி பல்வேறு இனங்களையும் சார்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எங்களின் விருந்துபசரிப்பில் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது என்றும் மக்கள் எங்களுக்குக் காட்டி வரும் ஆதரவு மனநிறைவளிக்கிறது என்றும் கூறினார்.

மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல விருந்துபசரிப்பு குறித்து கருத்துரைத்த மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன், எதிர்பார்த்ததை விட அதிகமாகத் திரண்ட பொதுமக்களின் வரவேற்பு தங்களுக்கு மகிழ்வைத் தருவதாகக் கூறினார்.

தீபாவளி உபசரிப்புக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து சேவையாளர்கள், பணியாளர்களுக்கும், மஇகா தலைவர்களுக்கும், பொது இயக்கங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்

சாஹிட்-சரவணன்-சாமிவேலு

இஸ்மாயில் சப்ரி – எம்.அசோஜன் – குணசேகரன் – மஇகா நிர்வாகச் செயலாளர் இராமலிங்கம்