Home One Line P2 பேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி

பேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி

762
0
SHARE
Ad

பாங்காக்: தாய்லாந்துக்கு நாட்டுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டதோடு, அங்கு நடைபெற்ற ஆசியான் உச்சநிலைத் தலைவர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வழக்கம்போல் தாய்லாந்திலுள்ள இந்திய வம்சாவளியினருடனான பிரம்மாண்டமான சந்திப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தியாவில் தனது ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார முன்னேற்றங்கள், சீர்திருத்தங்கள் குறித்தும் மோடி கூடியிருந்த மக்களிடையே எடுத்துரைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

தனதுரையில் ஒரு திருக்குறளை தமிழிலேயே கூறிய மோடி அதற்கான பொருளையும் கூறி கூட்டத்தினரில் பலத்த கரவொலியைப் பெற்றார்.

“தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு”

என்பதுதான் மோடி தமிழிலேயே கூறிய அந்தத் திருக்குறள். தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே என்று அந்தக் குறளின் பொருளையும் மோடி எடுத்துரைத்தார்.

தனது தொடக்க உரையில் வணக்கம் என்றும் மோடி தமிழில் கூறினார்.

அண்மையக் காலமாக செல்லும் இடமெல்லாம், வெளிநாடுகளிலும், உள்நாட்டு நிகழ்ச்சிகளிலும் தமிழின் பெருமையைக் கூறுவதோடு, திருக்குறள் மற்றும் பழங்காலத் தமிழ்க் கவிதைகள் சிலவற்றையும் மேற்கோள் காட்டி மோடி பேசி வருவது தமிழ்நாட்டில் அவரது தோற்றத்தையும், புகழையும் கணிசமாக உயர்த்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராகத் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட எதிர்மறையான தோற்றம் தற்போது முறியடிக்கப்பட்டிருப்பதாகவும், அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.