அடுத்த பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்குமாறு சில தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் இருந்தபோதிலும், அதற்கு முன்பதாகவே தாம் பதவி விலக உறுதிபூண்டுள்ளதாக, சிட்னி மார்னிங் ஹெரால்டு நேர்காணலின் போது அவர் கூறினார்.
“அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவதே எனது உறுதி, நிச்சயமாக பதவி விலகுவேன்” என்று அவர் நேற்று திங்கட்கிழமை கூறினார்.
எவ்வாறாயினும், அது தொடர்பான குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுக்க டாக்டர் மகாதீர் மறுத்துவிட்டார்.
“இது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடக்கும் என்று என்னால் கூற முடியாது. ஆனால், நான் உறுதியளித்தபடி நிச்சயமாக விலகுவேன்” என்று மகாதீர் கூறினார்.