Home One Line P2 ‘பாட்ஷா 2’ படத்தை இயக்க விரும்பும் அட்லி, ஒப்புக் கொள்வாரா ரஜினிகாந்த்?

‘பாட்ஷா 2’ படத்தை இயக்க விரும்பும் அட்லி, ஒப்புக் கொள்வாரா ரஜினிகாந்த்?

952
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 90-களில் நடித்து வெளியான பாட்ஷா திரைப்படம், அவரது திரைப்பட வரலாற்றில் இன்று வரையிலும் பேசப்படும் படமாக திகழ்கிறது.

ரஜினிகாந்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாகவும் இது கருதப்படுகிறது. நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவா சொன்ன மாதிரிபோன்ற வசனங்கள் இன்றளவும் பேசப்படும் வசனங்களில் ஒன்றாகும்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். பெருமளவில் வெற்றியைப் பெற்று, தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பிற இந்திய சினிமாவிலும் ரஜினிகாந்தை பிரபலமாக்கியது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இத்திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போது இயக்குனர் அட்லி, இந்த படத்தின் தொடர்ச்சியை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில், ‘பாட்ஷா 2’ படத்திற்காக ஒரு கதை மனதில் இருப்பதை அட்லி வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் தமது கதைக்கு ஒப்புக்கொண்டால், அதன் தொடர்ச்சியை இயக்குவதில் அட்லி தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அட்லியின் கதையை ரஜினிகாந்த ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.