கோலாலம்பூர்: 700 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை மறுபங்கீடு செய்வதற்காக அமெரிக்க நீதித்துறையுடன் ஓர் உடன்பாட்டை எட்டிய தொழிலதிபர் ஜோ லோவின் நடவடிக்கைகளுக்கு, இந்நாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
இந்நாட்டில் தவறான நடத்தைக்கு ஜோ லோ மீது குற்றம் சாட்டப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
“இன்றுவரை, 1எம்டிபி ஒரு பிரச்சனையே இல்லை என்று சிலர் மறுத்துள்ளனர். 1எம்டிபி பிரச்சனை அல்ல என்றும் அது ஒரு மோசடி என்று கூறி வருகின்றனர். இருப்பினும், இதில் ஜோ லோ தாமே அக்குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டது போல் பணத்தை செலுத்தி தீர்த்துக் கொண்டார். 1எம்டிபி பிரச்சனையாக இல்லையென்றால், ஏன் பணம் செலுத்தப்பட வேண்டும்?”
“கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்துதல் என்பது அவரது தவறான நடத்தைக்கு எதிராக அவர் தப்பித்துவிடுவார் என்று அர்த்தமல்ல,” என்று அவர் நேற்று மக்களைவையில் தெரிவித்தார்.