பேங்காக்: இரண்டாவது ஆண்டாக ஆசியான் உச்ச மாநாட்டில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளாததால் ஆசியான்– அமெரிக்க உச்ச மாநாட்டில் பெரும்பான்மையான ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் கட்டத்தில் பிரதமர் மகாதீர் முகமட் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தபோதும், இறுதி நேரத்தில் தமது அட்டவணையை மாற்றி அதில் பங்கேற்கவில்லை.
அந்த உச்சமாநாட்டில் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாமின் உயர் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அமெரிக்காவை பிரதிநிதித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினார்.
உச்சமாநாட்டில் ஓ‘பிரையன் எந்த சூழ்நிலையிலும் ஆசியானுடனான உறவை அமெரிக்கா பராமரிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் உரையை வாசித்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா நடத்தவிருக்கும் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள ஆசியான் தலைவர்களையும் டிரம்ப் அழைத்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த 34-வது ஆசியான் உச்ச மாநாட்டில் அமெரிக்கா துணை ஜனாதிபதி மைக் பென்ஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.