Home One Line P2 2-வது முறையாக டிரம்ப் ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை!

2-வது முறையாக டிரம்ப் ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை!

838
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற இருக்கும் 35-வது ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனும் தகவல் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் டிரம்ப் பங்குக் கொள்ளாதது இரண்டாவது முறையாகும்.

ஆசியான் மற்றும் அமெரிக்காவின் கூட்டங்களுக்கு பிரதிநிதியாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் மற்றும் வணிக செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோரை மட்டுமே அனுப்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரோஸ் பாங்காக்கில் நடைபெறும் இரண்டாவது இந்தோ பசிபிக் வணிக மன்றத்திற்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து, இந்தோனிசியாமற்றும்வியட்நாமுக்குவணிகபயணங்களைமேற்கொள்ள உள்ளார்.

#TamilSchoolmychoice

ஆசியான் உச்ச மாநாட்டில் டிரம்ப் மற்றும் அமெரிக்க பொதுச் செயலாளர் மைக் பாம்பியோ ஏன் கலந்து கொள்ளவில்லை, என்பதை வெள்ளை மாளிகை விரிவாகக் கூறவில்லை.

2018-ஆம் ஆண்டில், டிரம்ப் சிங்கப்பூரில் நடந்த 33-வது ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அவரது துணை அதிபர் மைக் பென்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

டிரம்ப் தாம் அமெரிக்க அதிபர் பதவியினை ஏற்ற முதல் ஆண்டில் மணிலாவில் நடந்த ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொண்டார்.

ஆசியான் உறுப்பு நாடுகளை பெரிதும் பாதிக்கும் தென் சீனக் கடலில் பதட்டங்கள் மற்றும் சீனாவின் வணிகப் போர் போன்ற பல பிராந்திய பிரச்சனைகள் காரணமாக டிரம்பின் இருப்பு இந்த மாநாட்டில் முக்கியமானதாக கருதப்படுகிறது.