Home One Line P1 பிளாஸ்: தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டால், கட்டண விகிதங்களை அகற்றவோ அல்லது குறைக்கவோ சாத்தியமில்லை!- அஸ்மின்

பிளாஸ்: தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டால், கட்டண விகிதங்களை அகற்றவோ அல்லது குறைக்கவோ சாத்தியமில்லை!- அஸ்மின்

602
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிளாஸ் நிறுவனத்தை கையகப்படுத்த விரும்பும் எந்தவொரு தனியார் துறையும், கட்டண விகிதங்களை அகற்றவோ அல்லது குறைக்கவோ முடிந்தால் அவ்வாறு செய்வது வரவேற்கத்தக்கது என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

இருப்பினும், எந்தவொரு தனியார் நிறுவனமும் அதைச் செய்ய முடியாது, ஏனெனில் அவை மக்களின் நலனைக் காட்டிலும் இலாபத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுபவை என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிளாஸ் தற்போது 51 விழுக்காடு பங்குகளுடன் கஸானா (கஸானா நேஷனல் பெர்ஹாட்) மற்றும் 49 விழுக்காட்டுடன் ஊழியர் சேமநிதி வாரியத்திற்குச் (இபிஎப்) சொந்தமானது.”

ஒரு தனியார் தரப்புக்கு பிளாஸ் விற்பனை செய்யப்பட்டால், ஒரு கட்டணத்தை விதித்து, கட்டண விகிதத்தை உயர்த்தினால், அது நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையைப் பூர்த்தி செய்யாது.”

கஸானாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பிளாஸ் நிறுவனத்தை வாங்குபவர் கட்டண விகிதத்தைக் குறைக்க அல்லது கட்டணத்தை அகற்ற உத்தரவாதம் அளிக்க முடியுமா? தனியார் துறை தங்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றை வாங்க விரும்புவதால், இது நிச்சயமாக சாத்தியமில்லை.” என்று அவர் நேற்று புதன்கிழமை கூறினார்.