ஜோகூர் பாரு: மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 1,000 ரிங்கிட் சிறப்பு மானியத்தை ஒரு பிரச்சனையாக ஏற்படுத்தக்கூடாது என்று ஜோகூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு உதவி பல ஆண்டுகளாக மாநில அரசின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ டாக்டர் சாஹாருடின் ஜாமால் தெரிவித்தார்.
“இந்த மானியத்தை வழங்குவது மாநில அரசு. இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
“இது முன்னர் வழங்கப்பட்ட ஒரு கொடுப்பனவு. முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும், இந்த சிறப்பு உதவி வழங்கப்பட்டது.” என்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, இஸ்காண்டார் புத்ரிரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 1,513 மீனவர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து நேற்று பெர்சே 2.0 அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில், மத்திய அரசும், மாநில அரசுகளும் நிதி உதவிகளை அத்தொகுதியில் அறிவிப்பது ஏற்க முடியாது செயல் என்று அது சாடியிருந்தது.