மலேசியாவில் வாழும் புலம்பெயர்ந்த சீக்கியர்களுக்கு இந்த புனிதமான நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்தக் கொண்டாட்டதின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், குருத்வாரா சபை மற்றும் சீக்கிய அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அவை 14 வைசாக்கி கொண்டாட்டங்கள், குரு நானக் ஜியின் கருப்பொருளைக் கொண்டு குழந்தைகளுக்கான 4 நிகழ்ச்சிகள், குரு நானக் ஜியின் வாழ்க்கை வரலாற்றின் சிறப்பு திரையிடல் போன்றவையாகும்.
மேலும் அரசு பிரமுகர்கள், புலம்பெயர்ந்த சீக்கிய பிரபலங்கள், மற்றும் ஊடகவியலாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்தேவ் கோர், ஷாபாத் குர்பானி கீர்த்தனைகளைப் பாடினார். அதனைத் தொடர்ந்து, ‘குர்பானி-புனிதர்கள், ‘பொற்கோவில்’, மற்றும் ‘சர்பத் டா பல்லா’ போன்ற ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. சிம்லா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஹர்மொஹிந்தர் சிங் பெடி, குரு நானக் தேவ் ஜி பற்றி உரையாடினார். இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ பல்விந்தர் சிங் தலைமையில் ராகி இசைக் குழு தங்களின் கீர்த்தனைகளால் அனைவரையும் கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மலேசியாவிலுள்ள குருத்வாரா மற்றும் சீக்கிய அமைப்புகளிலிருந்து சுமார் 160 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சு சீக்கியம் குறித்த சர்வதேச இளைஞர் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் சீக்கிய புனித தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மூன்று மலேசிய சீக்கிய இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.