Home One Line P2 பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

918
0
SHARE
Ad

மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவினால் மும்பையில் உள்ள பிரிச் கெண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 20-க்கும் அதிகமான மொழிகளில் அவர் பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரசிகர்களால் இசைக்குயில் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர். இதுவரை 30,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

டைம்ஸ் அப் இந்தியாவிற்கு இது குறித்து தகவல் தெரிவித்த மருத்துவர்கள், அவரின் நிலைமை கவலைக்கிடமாகவும், இயந்திரம் மூலம் சுவாசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடுமையான நுரையீரல் தொற்று நோய்க்கு பாதிப்பானதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதும், நேற்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

லதாவின் குடும்பத்தார், அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், கூடிய விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.