Home One Line P1 தஞ்சோங் பியாய்: முன்கூட்டிய வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது!

தஞ்சோங் பியாய்: முன்கூட்டிய வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது!

790
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

பொந்தியான்: 280 ஆரம்ப வாக்காளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தங்கள் வாக்குகளைச் செலுத்த ஏதுவாக பொந்தியான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வாக்குப்பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது.

பெக்கான் நெனாஸ் சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு மையம் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும், அதே நேரத்தில் குகுப் சட்டமன்றத்திற்கு வாக்களிக்கும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

முதற்கட்ட வாக்குப்பதிவு செயல்முறைகளை வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிடுவார்கள்.

#TamilSchoolmychoice

வருகிற நவம்பர் 16-ஆம் தேதி, பொந்தியான் மாவட்ட அலுவலகத்தின் சந்திப்பு அறையில் வாக்குகள் எண்ணப்படும்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதியன்று மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் ஆறு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கர்மைன் சர்டினி, தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ ஜெக் செங், கெராக்கானைச் சேர்ந்த வெண்டி சுப்பிரமணியம், பெர்ஜாசாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் பாட்ருலிஷாம் அப்துல் அசிஸ் மற்றும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான டாக்டர் அங் சுவான் லாக் மற்றும் பாரிடா ஆர்யணி அப்துல் காபார் ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.