Home One Line P1 தஞ்சோங் பியாய்: ஆறு முனை போட்டி நிலவுகிறது!

தஞ்சோங் பியாய்: ஆறு முனை போட்டி நிலவுகிறது!

702
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

பொந்தியான்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கியது. இங்குள்ள டேவான் ஜூப்ளி இந்தான் சுல்தான் இப்ராகிம் மண்டபத்தில் இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடக்கும் 9-வது இடைத் தேர்தல் இதுவாகும்.

இம்முறை இத்தொகுதியில் ஆறு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி, கெராக்கான், ஜெமா இஸ்லாமியா (பெர்ஜாசா) கட்சி மற்றும் கூட்டணிகளைப் பிரதிநிதித்து வேட்பாளர்கள் இம்முறை களத்தில் போட்டியில் இறங்க உள்ளனர். மேலும், இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனு தாக்கலை சமர்ப்பித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து தஞ்சோங் பியாய் பெர்சாத்து தலைவர் கர்மெய்ன் சர்டினியும் (66), தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து மசீசவின் வீ ஜெக் செங்கும் (55) போட்டியிடுகின்றனர்.

மேலும், இம்முறை கெராக்கான் தமது வேட்பாளராக அதன் துணை பொதுச்செயலாளர் வெண்டி சுப்பிரமணியத்தை களத்தில் இறக்குகிறது. பெர்ஜாசாவை பிரதிநிதித்து அதன் தலைவர் டாக்டர் பட்ருலிஷாம் அப்துல் அசிஸ் (56) பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இரண்டு சுயேச்சை வேட்பாளர்களான ஆங் சுவான் லாக் (49) மற்றும் பாரிடா ஆரியாணி அப்துல் கபாரும் (43) போட்டியில் குதிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதியன்று மாரடைப்பால் டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் காலமானதைத் தொடர்ந்து தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும்.