Home One Line P1 “வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை!”- அன்வார்

“வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை!”- அன்வார்

953
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமையன்று நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியில் எந்த விதமான இன கூறுகளும் இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

சீன மற்றும் மலாய் வாக்காளர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே நான் அதை இனம் தொடர்புடையது என்று நினைக்கவில்லை. நாம் உண்மையில் மக்களின் (மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள்) ஏமாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்று  நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

வாக்காளர்கள் ஆதரவின் மாற்றத்திலிருந்து நம்பிக்கைக் கூட்டணி வேர் பிரச்சனையை அறியத் தவறினால், இந்த கூட்டணிக்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மக்கள் ஆதரவை இழந்ததால் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, ​​அது தேவையற்றது என்று அன்வார் கூறினார்.

அதிர்ச்சியூட்டும் தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இன்னும் சில பயனுள்ள நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.”

ஆனால் ஓரிரு தோல்விகலில் (இடைத்தேர்தலில்) அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதிலிருந்து விலகுவது சரியில்லைஎன்று அவர் மேலும் கூறினார்.

சனிக்கிழமையன்று, தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.