Home நாடு தஞ்சோங் பியாய்: வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது

தஞ்சோங் பியாய்: வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது

789
0
SHARE
Ad

பொந்தியான் – நாடு முழுமையிலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்குகிறது.

இங்குள்ள டேவான் ஜூப்ளி இந்தான் சுல்தான் இப்ராகிம் மண்டபத்தில் இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடக்கும் 9-வது இடைத் தேர்தல் இதுவாகும்.

#TamilSchoolmychoice

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து மசீசவின் வீ ஜெக் செங் (வயது 55) களம் இறங்க உள்ளார். வீ இதற்கு முன் இதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வென்று வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வீ நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான காலம் சென்ற முகமட் பாரிட் முகமட் ராபிக்கிடம் 524 பெரும்பான்மை வாக்குகளில் தோல்வியுற்றார்.

நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் பெர்சாத்து கட்சியின் கர்மாயின் சார்டினி (வயது 66) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.