Home One Line P1 தஞ்சோங் பியாய்: மசீசவின் வீ ஜெக் செங் தேசிய முன்னணி சார்பாக களம் இறங்குகிறார்!

தஞ்சோங் பியாய்: மசீசவின் வீ ஜெக் செங் தேசிய முன்னணி சார்பாக களம் இறங்குகிறார்!

813
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து மசீசவின் வீ ஜெக் செங் களம் இறங்க உள்ளார்.

அத்தொகுதிக்கு போட்டியிட அம்னோ கடுமையாக வற்புறுத்தினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தஞ்சோங் பியாய் மசீச உறுதிப்படுத்தியது. இது குறித்த அறிவிப்பு இன்று புதன்கிழமை பொந்தியான் மசீச தலைமையகத்தில் அறிவிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

ஜோகூர் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட், தஞ்சோங் பியாய் அம்னோவிற்கு, வீவின் வேட்புமனு குறித்து இன்று சிறப்பு விளக்கமளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அத்தொகுதி அம்னோ பிரிவு, முன்னதாக தங்கள் தலைவர் ஜெப்ரிடின் அதான் போட்டியிட வேண்டும் என்று விரும்பியது. வீ இரண்டு முறை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வீ நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான காலம் சென்ற முகமட் பாரிட் முகமட் ராபிக்கிடம் பெரும்பான்மையான வாக்குகளில் தோல்வியுற்றார்.