Home One Line P1 தஞ்சோங் பியாய்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஸ் தமது வேட்பாளரை தயார் நிலையில் வைத்துள்ளது!

தஞ்சோங் பியாய்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஸ் தமது வேட்பாளரை தயார் நிலையில் வைத்துள்ளது!

595
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் வேட்புமனு தாக்கலின் போது, தமது சொந்த வேட்பாளரை களம் இறக்க பாஸ் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்படாத ஒரு மூல அறிக்கையை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சியின் நியமனம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பெரிதா ஹாரியான் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சித் தலைமையை பாஸ் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தேவை ஏற்பட்டால் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுள்ள கட்சி உறுப்பினர்களை பாஸ் அடையாளம் கண்டுள்ளது என்றும் அவ்வட்டாரம் கூறியுள்ளது.

சிறு பிழைகள், தொழிநுட்பக் காரணங்களுக்காக நம்பிக்கைக் கூட்டணி இத்தேர்தலில் சுலபமாக வெற்றிப் பெற செய்ய விரும்பவில்லை என்றும் பாஸ் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துப்பிழை அல்லது பிற சிறிய பிழைகள் போன்ற பல தொழில்நுட்ப காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கலின் போது பல பரிந்துரைகளை இரத்து செய்துள்ளது.

இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை.