கோலாலம்பூர்: 1எம்டிபி கடனுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 14 பில்லியன் ரிங்கிட் வட்டியை அடுத்த ஆண்டு வரை செலுத்த வேண்டியுள்ளது என்று துணை நிதியமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.
1எம்டிபியின் வட்டித் தொகை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“நாட்டை நிர்வகிக்க ஒப்படைக்கப்பட்டவர்கள் இனி இம்மாதிரியான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாது இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று நேற்று திங்கட்கிழமை இரவு ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் மலேசியர்களுடனான நட்பு அமர்வில் அவர் கூறினார்:
“இதுவரை, நாம் 1எம்டிபி கடனுக்கான வட்டியை மட்டுமே செலுத்தியுள்ளோம். முதலான 36 பில்லியன் ரிங்கிட் இன்னும் செலுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
1எம்டிபி கடனைத் தீர்க்க அரசாங்கம் 43.9 பில்லியன் ரிங்கிட் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் முன்பு கூறியிருந்தார்.