Home One Line P2 தொடரும் ஆர்ப்பாட்டங்களினால் ஹாங்காங் பங்குகள் மோசமான சரிவை அடைந்தன

தொடரும் ஆர்ப்பாட்டங்களினால் ஹாங்காங் பங்குகள் மோசமான சரிவை அடைந்தன

688
0
SHARE
Ad

ஹாங்காங்: நேற்று திங்கட்கிழமை காலை ஓர் எதிர்ப்பாளரை ஹாங்காங் காவல் துறையினர் சுட்டுக் காயப்படுத்திய பின்னர் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தது. இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து ஹாங்காங் பங்குகள் மோசமான சரிவை அடைந்து வருகின்றன.

இதற்கிடையில், நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நில உரிமையாளர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், ஹேங் செங் குறியீடு 2.6 விழுக்காடாக குறைந்தது. நகரத்தின் பங்குகள் 118 பில்லியன் டாலர் மதிப்பை இழந்தன.

சாலைகளைத் தடுத்து நிறுத்திய அலுவலக ஊழியர்களை கலைக்க காவல் துறையினர் வணிக மையத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.  எம்எஸ்சிஐ ஹாங்காங் குறியீடு 2.9 விழுக்காடு சரிந்தது மற்றும் உள்ளூர் டாலர் பலவீனமடைந்தது.

#TamilSchoolmychoice

இந்நகரத்தின் பங்குகளின் திடீர் வீழ்ச்சி ஆசியாவில் மிக மோசமானதாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.