Home One Line P1 தஞ்சோங் பியாய்: மக்கள் கோபத்தில் வாக்களிக்கக்கூடாது!- மகாதீர்

தஞ்சோங் பியாய்: மக்கள் கோபத்தில் வாக்களிக்கக்கூடாது!- மகாதீர்

679
0
SHARE
Ad

தஞ்சோங் பியாய்: அரசாங்கத்திற்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்காக தவறான வேட்பாளரை தஞ்சோங் பியாய் மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கேட்டுக் கொண்டார்.

அவர்கள் அவ்வாறு செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இப்பகுதியில் வளர்ச்சியைப் பெறுவதற்குத் தேவையான சேவைகளை வழங்க முடியாமல் போகலாம் என்றும், அது ஓர் பெரும் இழப்பாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

நீங்கள் கோபத்தில் வாக்களிக்காதீர்கள். அதற்கும் வளர்ச்சிக்கும் நீண்ட இடைவெளி உண்டு. ஏமாற வேண்டாம், சேவை செய்ய முடியாதவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்” என்று நேற்றிரவு புதன்கிழமை, இங்குள்ள குகுப் பஸ் முனையத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சிறந்த உள்கட்டமைப்பு, புதிய தொலைதொடர்பு கோபுரங்கள், விரிவான பாதுகாப்பு, சாலை பழுது மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு உள்ளிட்ட பகுதியாக தஞ்சோங் பியாய்யை உருவாக்க அரசாங்கத்திற்கு பல திட்டங்கள் உள்ளன என்று துன் மகாதீர் கூறினார்.

இருப்பினும், நம்பிக்கைக் கூட்டணியுடன் நேரடி தொடர்புடைய வேட்பாளர் கர்மெய்ன் சர்டினி தேர்வுப் பெற்றால் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டார். 

நாங்கள் இங்கே முதலீடுகளை ஏற்படுத்த உள்ளோம். இன்று இருப்பதை விட சிறந்த உள்கட்டமைப்பை நாங்கள் வழங்க முடியும். இங்கு தொலைதொடர்பு நிலைமை மோசமாக இருந்தால், அதை சரிசெய்வோம். புதிய சாலையை அமைப்பதன் மூலம் சாலை பிரச்சனைகளை சரிசெய்வோம்.”

“எப்போதும் வெள்ளம் ஏற்பட்டால், வெள்ளத்தை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.” என்று அவர் மேலும் கூறினார்.