கோலாலம்பூர்: ஆட்சியில் இருந்தபோது பேராசை மற்றும் ஆணவம் காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களின் இன அரசியல் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
மக்கள் தொடர்ந்து திரண்டு வருவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டாம் என்று டாக்டர் மகாதீர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
“தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அவர்களின் பிரதிநிதிக்கு வாக்களிக்காததன் வாயிலாக இதனை செயல்படுத்தலாம்.”
“அவர்களின் நடவடிக்கைகள் உள்நாட்டு சண்டைக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்களுக்கு, மோதல் ஏற்பட்டால், அவர்கள் செய்த தவறுகள் ஓரங்கட்டப்படும்” என்று டாக்டர் மகாதீர் நேற்று வியாழக்கிழமை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், தஞ்சோங் பியாய் பெர்சாத்து கட்சித் தலைவரான நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கர்மெய்ன் சர்டினி, மறைந்த டத்தோ டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் அவர்களின் முயற்சிகளைத் தொடர ஒரு நல்ல வேட்பாளர் என்று தாம் நம்புவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.
நாளை சனிக்கிழமையன்று (நவம்பர் 16)இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.