தஞ்சோங் பியாய்: நாளை சனிக்கிழமையன்று தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி இலகுவாக வெற்றிப் பெரும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக பிரபல கருத்துக் கணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இது ஓரளவுக்கு, சீன வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணி பக்கம் சாய்ந்துள்ளதைக் குறிப்பதாக இல்ஹாம் மைய ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
“இந்த கள ஆய்வில், தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியுற்றது (59.1 விழுக்காடு), மோசமான மத்திய அரசின் செயல்திறன் (59 விழுக்காடு), மோசமான மாநில அரசாங்க செயல்திறன் (53) போன்ற காரணங்களால் சீன வாக்குகள் தேசிய முன்னணி பக்கம் சாய்ந்துள்ளது. மேலும், வாழ்க்கைச் செலவினங்கள் தேசிய முன்னணி காலத்தைக் காட்டிலும் 60 விழுக்காடு அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர் ”என்று கணிப்பு கூறியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில், 74 விழுக்காட்டு சீன வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரித்தனர். வெறும், 26 விழுக்காட்டினர் மட்டுமே தேசிய முன்னணியை ஆதரித்தனர்.