Home One Line P2 சந்திரயான் 3 தயாராகிறது, அடுத்த ஆண்டு நவம்பரில் பாய்ச்சப்படலாம்!

சந்திரயான் 3 தயாராகிறது, அடுத்த ஆண்டு நவம்பரில் பாய்ச்சப்படலாம்!

771
0
SHARE
Ad

பெங்களூரு: சந்திரயான் 3 பணிக்காக, இஸ்ரோ பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய லேண்டர் மற்றும் ரோவரை வடிவமைத்து உருவாக்க உள்ளதாக டி டைம்ஸ் அப் இந்தியா தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 திட்டத்தின் வாயிலாக ஏற்கனவே நிலவைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் ஒரு செயல்பாட்டு சுற்றுப்பாதை இருப்பதால், சந்திரயான் 3 அதன் சொந்த சுற்றுப்பாதையில் இடம்பெறாது என்று அது தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, லேண்டர் மற்றும் ரோவர் ஒரு கூடுதல் பிரிக்கக்கூடிய தொகுதி உடன் இருக்கும் என்றும், இது பயணத்திற்கு தேவையான இயந்திரம் மற்றும் எரிபொருளை ஏந்தியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொகுதி தற்காலிகத்திற்கு உந்துவிசை தொகுதி” (propulsion module) என்று அழைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சந்திரயான் 3 குறைவான சுற்றுப்பாதை சூழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்.  இது பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி மொத்தம் 6 சுற்றுப்பாதைகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் முயற்சியின் போது நிலவில் விபத்துக்குள்ளான லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யன் உடன் இஸ்ரோ தொடர்ந்து தொடர்பு கொள்ள இயலவில்லை.