Home One Line P1 நாட்டில் 53 விழுக்காடு தொழிலாளர்களுக்கு போதுமான உரக்கம் இல்லை!

நாட்டில் 53 விழுக்காடு தொழிலாளர்களுக்கு போதுமான உரக்கம் இல்லை!

857
0
SHARE
Ad
படம்: நன்றி எச்ஆர் இன் ஆசியா

கோலாலம்பூர்: நாட்டில் 51 விழுக்காடு தொழிலாளர்கள் போதிய தூக்கம், அதிக பணிச்சுமை மற்றும் நிதிப் பிரச்சனைகள் உள்ளிட்ட வேலைகள் தொடர்பான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ராண்ட் ஐரோப்பா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (யுகேஎம்) ஆகியவற்றுடன் இணைந்து ஏஐஏ வைட்டலிட்டி 2019 வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது.

ஒரு வருடத்திற்குள், நாட்டில் 28 விழுக்காட்டு தொழிலாளர்கள் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருப்பது அல்லது ஆரோக்கியமின்மையால் வேலையில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ராண்ட் ஐரோப்பாவின் துணைத் தலைவர் டாக்டர் கிறிஸ்டியன் வான் ஸ்டோக்கின் தெரிவித்தார். 

இதனால் அவர்களின் உற்பத்தித்திறனை இழக்க நேரிடும்.

#TamilSchoolmychoice

நாட்டில் 53 விழுக்காடு தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரமாவது போதுமான தூக்கம் கிடைப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 17 விழுக்காடு தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் சோர்வாக உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் உற்பத்தித்திறனின் இழப்பில் எதிர் நோக்குகிறார்கள்.

இந்த சிக்கல்களினால் ஒவ்வொரு ஆண்டும் ஓர் அமைப்பானது சராசரியாக 1.46 மில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர் நோக்குகிறதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாட்டில் 51 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

22 விழுக்காடு தொழிலாளர்கள் நிதி பற்றாக்குறை அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

90 விழுக்காடு தொழிலாளர்களுக்கு சீரான உணவு பழக்கமுறை இல்லை என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களில் 42 விழுக்காட்டினர் எடை பிரச்சனைகள் அல்லது உடல் பருமன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமநிலையற்ற உணவு காரணமாக, 32 விழுக்காடு தொழிலாளர்கள் சிறுநீரக பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள்து.