கொழும்பு: இலங்கையில் இன்று சனிக்கிழமை புதிய அதிபரைத் தேர்த்தெடுப்பதற்காக தேர்தலில் இலங்கைவாசிகள் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி இன்று உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணிக்கு வாக்களிப்புத் தொடங்கியது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தாபயா ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (யுஎன்பி) வேட்பாளர் சஜித் பிரேமதாசா முக்கிய வேட்பாளராக இந்த தேர்தலில் கருதப்படுகின்றனர். மொத்தமாக 35 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேல் விபரங்கள் இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் சாலையில் வட்டகைகளை எரித்து அவ்வழியாக செல்ல இருந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரந்து சென்ற காவல் அதிகாரிகள் சாலையில் உள்ள தடைகளை அகற்றி, சம்பந்தப்பட்ட வாக்களர்களை பாதுகாப்பாக வாக்களிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.