கோலாலம்பூர் : நாட்டில் கொவிட்-19 பாதிப்புகளால் எழுந்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை மலேசியர்களுக்காக உருவாக்கவும் விரிவானதொரு தொழில் பயிற்சித் திட்டத்தை இ.என்.எஃப்-எலைட் செக்கியூரிட்டி சேஃப்டி அண்ட் ஹெல்த் டிரெயினிங் அகாடமி (ENF-Elite Security Safety and Health Training Academy Sdn Bhd) வடிவமைத்து இலவசமாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் பங்கு பெற்று பயனடையுமாறு இந்திய சமூகத்தை இ.என்.எஃப்-எலைட் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தொழில் பயிற்சித் திட்டத்தில் மற்ற இனத்தவர்கள் குறிப்பாக மலாய் சகோதர இனத்தவர் மிக அதிகமாகப் பங்கு பெற்று பயனடைந்து வருகிறார்கள். எனினும் மலேசிய இந்திய சமூகத்தினரின் பங்கெடுப்பு மிகக் குறைவாக இருப்பதால் இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுப்பதாகவும் இ.என்.எஃப்-எலைட் நிறுவன நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்
இரண்டு வாரகாலம் இந்தத் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கு பெற கீழ்க்காணும் தகுதிகளை பங்கேற்பாளர்கள் கொண்டிருக்க வேண்டும்:
- 18 முதல் 52 வரையிலான வயது வரம்பைக் கொண்டிருக்க வேண்டும்.
- குறைந்த பட்சம் எஸ்ஆர்பி அல்லது பிஎம்ஆர் தேர்வு வரையிலான கல்வித் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
- மலேசிய இராணுவத்தின் முன்னாள் வீரர்கள், காவல் துறையில் பணிபுரிந்த முன்னாள் வீரர்கள், மற்ற பாதுகாப்புப் படைகளில் பணிபுரிந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்களுக்கு குற்றவியல் பின்னணி எதுவும் இருக்கக் கூடாது.
1,800 ரிங்கிட் சம்பளம் உறுதி – மற்ற பயன்கள்
- இரண்டு வார கால முழுநேர பயிற்சி வழங்கப்படும்
- இந்த இரண்டு வார கால பயிற்சியின்போது பயிற்சிக்கான தங்கும் விடுதியில் தங்குமிட வசதி, ஆறு வேளை உணவு வழங்கப்படும்.
- மேலும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் 500 ரிங்கிட் சிறப்பு படித் தொகை (அலவன்ஸ்) தொகை வழங்கப்படும்.
- பயிற்சியை முறையாக நிறைவு செய்தவர்களுக்கு நற்சான்றிதழோடு சிறப்பு அடையாள அட்டையும் வழங்கப்படும்.
- பயிற்சிக் காலத்தின்போதே பாடம் வழியான கற்பித்தலோடு, தொழில் ரீதியான நேரடி அனுபவப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
- பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு இ.என்.எஃப்-எலைட் நிறுவனமே வேலைவாய்ப்புகளைத் தேடித் தரும்.
- இத்தகைய பாதுகாவலர் வேலைக்கு 1,200 ரிங்கிட் சம்பளம், 600 ரிங்கிட் சிறப்புப் படித் தொகை ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 1,800 ரிங்கிட் வரையிலான சம்பளம் கிடைப்பதை இ.என்.எஃப்-எலைட் உறுதி செய்யும்.
இத்தகைய பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கும் இந்த பயிற்சித் திட்டத்தில் இந்திய சமூகத்தினரும் இணைந்து பயன்பெற வேண்டும் என இ.என்.எஃப்-எலைட் நிறுவனம் இந்தியர்களைக் கேட்டுக் கொள்கிறது.
இந்தப் பயிற்சியை நிறைவு செய்வதன் மூலம் மலேசியா முழுக்க எல்லா நகர்களிலும் மிக அதிகமான தேவையைக் கொண்டிருக்கும் பாதுகாவலர் வேலைகளைப் பயிற்சியாளர்கள் சுலபமாக பெற முடியும்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் கீழ்க்காணும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்: