கோலாலம்பூர்: கடந்த வியாழக்கிழமை இங்குள்ள தாபிஸ் மையத்தில் முகமட் அய்மின் நூருல் அமீனை (7) கொலை செய்த குற்றச்சாட்டில் 13 வயது சிறுவர்கள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டு நீதிபதி டி பீ சி முன் வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, முகமட் அய்மினைக் கொலை செய்த குற்றச்சாட்டை வாசித்தபோது தலையசைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றத்திற்காக, தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் துணை அரசு வக்கீல் ரிபா இசாதி அப்துல் முத்தாலிப் வழக்குத் தொடர்ந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கைக்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதற்காகவும் டிசம்பர் 19-ஆம் தேதி இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.