Home One Line P1 தாபிஸ் கொலை: மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரை இளைஞர் சிறையில் அடைக்கப்படுவார்!

தாபிஸ் கொலை: மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரை இளைஞர் சிறையில் அடைக்கப்படுவார்!

584
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2017- ஆம் ஆண்டில் தாபிஸ் டாருல் குர்ஆன் இட்டிபாக்கியா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 நபர்களைக் கொன்ற வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 19 வயது நபர், மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரையில் சிறையில் வைக்கப்படுவார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

23 நபர்களை வேண்டுமென்றே கொலை செய்த 23 குற்றச்சாட்டுகளில் நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த நீதிபதி அஸ்மான் அப்துல்லா, இப்போது 19 வயதாகும் இளைஞருக்கு இத்தண்டனையை விதித்தார்.

சம்பவம் நடந்தபோது அந்த இளைஞனுக்கு 16 வயது.

#TamilSchoolmychoice

“அனைத்து தரப்பினரின் சாட்சியங்களையும் கேட்டபின், சம்பந்தப்பட்ட நபர் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கத்துடன் செய்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது” என்று அஸ்மான் கூறினார்.

சம்பவம் நடந்தபோது அந்த இளைஞன் இன்னும் வயது குறைந்தவனாக இருந்ததால், சிறுவர் சட்டம் 2001- இன் பிரிவு 97 (1) தண்டனைக்கு உட்படுத்தியதாக நீதிபதி கூறினார்.

சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தனது வாடிக்கையாளர் மன்னிப்பு கோரியதாகவும், தண்டனைக்கு எதிராக இன்று மேல்முறையீடு செய்வதாகவும் அவரது வழக்கறிஞர் ஹைஜன் ஒமர் கூறினார்.

28 ஜனவரி அன்று, கொலை குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்துக் கொள்ளுமாறு அஸ்மான், அந்த இளைஞனுக்கு உத்தரவிட்டார்.

திருத்தப்பட்ட குற்றச்சாட்டின் படி, இந்த இளைஞன், அடையாளம் தெரியாத நபருடன், செப்டம்பர் 14- ஆம் தேதி அதிகாலை 4.15 மணி முதல் காலை 6.45 மணி வரை, ஜாலான் கெராமாட் ஹுஜுங், கம்போங் டத்தோ கெராமாட், வாங்ஸா மஜூ ஆகிய இடத்தில் அமைந்துள்ள தாபிஸ் மையத்தில் தீ வைப்பின் மூலம் 23 மாணவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.