Home One Line P1 பெண் அதிகாரி கொலை உண்மையல்ல- காவல் துறை விசாரிக்கும்

பெண் அதிகாரி கொலை உண்மையல்ல- காவல் துறை விசாரிக்கும்

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் காணொளி குறித்து காவல் துறை மறுத்துள்ளது.

பெண் காவல் துறை அதிகாரி நேற்று காலை கிள்ளானில் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ பாட்சில் அகமட் கூறினார்.

அந்த காணொளி காவல் துறை அதிகாரியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்படுவதாகவும், காவல் துறை இந்த வழக்கை குற்றவியல் மிரட்டல் என வகைப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் அவதூறு பிரிவு 509- இன் கீழ் விசாரித்து வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி விட்டோம். சமூக ஊடகத் தளங்களில் படங்களையும் காணொளிகளையும் பரப்பிய (தனிநபர்கள்) யார் என்று நாங்கள் விசாரிப்போம், ” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொலை சம்பவத்துடன் பெண் காவல் துறை அதிகாரியை இணைக்கும் செய்தி உண்மையல்ல என்று காவல் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அதை மறுத்து பெண் காவல் துறை அதிகாரி காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட, ஒரு பெண் கை, கால்களைக் கட்டிய நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. அந்த காணொளியுடன் அப்பெண் அதிகாரியின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.