ரியாத்: சவுதி அரேபியா அடுத்த ஆண்டு முதல் பயணத் தடைகளை நீக்கும் என்று சவுதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இது நடைமுறைக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
நாட்டு மக்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் தடைகளும் நீக்கப்படும். இது அனைத்து நிலம், கடல் மற்றும் விமான போக்குவரத்திற்கும் உட்பட்டது.
இருப்பினும், அரசு ஊழியர்கள், வணிகர்கள், வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மற்றும் மாணவர்கள் செப்டம்பர் 15 முதல் இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்று அது தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மக்காவிற்கு அனுமதிக்கும் முடிவு கொவிட் 19 நிலைமையைப் பொறுத்து தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும் என்று அது கூறியது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனா வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, கொவிட் 19 தொற்று இதுவரை 188 நாடுகளிலும், வட்டாரங்களிலும் 922,000- க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருக்கின்றன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, உலகளவில் 28.89 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 19.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீண்டு வருகின்றனர்.