Home One Line P1 சூதாட்டத் தொழில்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்

சூதாட்டத் தொழில்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்

551
0
SHARE
Ad

கோத்தா பாரு: சூதாட்டத் தொழிலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி நாட்டில் சூதாட்டத் தொழிலை ஒழிப்பதற்கான தீர்மானம் பாஸ் கட்சி ஆண்டுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

செனட் உறுப்பினர் அஸ்மாக் ஹுசின் கோத்தா பாருவில் நடைபெற்ற 66 -வது பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த தீர்மானத்தை முன்வைத்தார்.

” சூதாட்டத்தின் மோசமான விளைவுகள் மலேசியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கி உள்ளது. மேலும், இது முஸ்லிம் அல்லாதவர்களாலும் மேலவையில் எழுப்பப்படுகிறது. இதன் விளைவுகள் சமூகத்தில் அதிகம் உணரப்படுகின்றன.

#TamilSchoolmychoice

“குறிப்பாக இந்த சூதாட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மற்றும் குழந்தைகள்.

“உரிமம் இல்லாமல் சூதாட்டப் பிரச்சனை பல தசாப்தங்களாக பெரிய அளவில் நடத்தப்படுகிறது. குறிப்பாக பெல்டா, கிராமங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் இளம் மலாய் முஸ்லிம்கள் சம்பந்தப்படுகிறார்கள்

“எனவே, மத்திய பாஸ் முஸ்லிம் மன்றத்தின் பிரதிநிதிகள், நாட்டில் சூதாட்டத் தொழிலை முற்றிலுமாக ஒழிப்பதற்கான உறுதிப்பாடாக உரிமம் பெற்ற சூதாட்டத்தை ஊக்குவிக்கும் காரணங்களைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், மூடவும் முயற்சிக்க நாங்கள் முன்மொழிகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சூதாட்டத் தொழிலைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்வதில் அமலாக்க அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதையும் அஸ்மாக் கேட்டுக் கொண்டார்.

“உரிமம் பெறாத சூதாட்ட நடவடிக்கைகளின் பிரச்சனை பெரும்பாலும் சட்ட அமலாக்கத்துடன் தொடர்புடையது என்பதை மறுப்பதற்கில்லை.

“வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை  தொடர்பான பிரச்சனைகள் பெரும்பாலும் மலேசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.