Home One Line P1 “பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை!”- பிரதமர் துறை

“பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை!”- பிரதமர் துறை

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை மூக்கில் சிறு இரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் டாக்டர் மகாதீர் முகமட் உடல்நலத்தில் எந்தவொரு பிரச்சனையும், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று பிரதமர் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

டாக்டர் மகாதீர் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. பணிக்காக அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார்என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்தார் எனும் செய்தி தவறானது என்று அது குறிப்பிட்டுள்ளது.

கோலாலம்பூரில் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம் (எம்பிஓபி) ஏற்பாடு செய்த காங்கிரஸ் மற்றும் அனைத்துலக செம்பனை கண்காட்சியைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போது டாக்டர் மகாதீர் தமது மூக்குத் துடைப்பதாக டி மலேசியன் இன்சைட் செய்தித்தளம்  தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

மேலும், அவரது கைக்குட்டையில் சிவப்பு நிறக் கரை காணப்பட்டதாகவும், அதனால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு, 94 வயதான பிரதமர் சிகிச்சைக்காக விரைந்து சென்றதாகவும் அது தெரிவித்திருந்தது.