Home One Line P1 “தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- அன்வார்

“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- அன்வார்

770
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றிரவு திங்கட்கிழமை தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பிகேஆர் துணைத் தலைவர் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்ததன் தொடர்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் விளக்கம் கோரியுள்ளார்.

நிச்சயமாக நாங்கள் விளக்கம் கேட்போம். இது நண்பர்களிடமிருந்து நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே அவர் (அஸ்மின்) அதை விளக்க வேண்டும், ”என்று அன்வார் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

நேற்றிரவு, குறைந்தது 22 தேசிய முன்னணி பிரதிநிதிகள் அஸ்மினின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியிருந்தனர். இது குறித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

அக்கூட்டம் கட்சி அல்லது அரசாங்கத் திறனில் நடந்ததா என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என்று அன்வார் கூறினார்.

கட்சியாக இருந்தாலும், அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது எதற்காக நடந்தது குறித்து எனக்கு ஒரு சிறந்த விளக்கத்தைக் கேட்கிறேன். அரசாங்கம் விவகாரம் என்றால், ஏன் அழைக்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்?என்று அவர் கேட்டார்.