Home One Line P2 பயணக்கைதிகளுக்கு ஈடாக 3 தலிபான் கைதிகள் விடுவிப்பு!

பயணக்கைதிகளுக்கு ஈடாக 3 தலிபான் கைதிகள் விடுவிப்பு!

868
0
SHARE
Ad

காபுல்: மேற்கத்திய பணயக்கைதிகளுக்கு ஈடாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று உயர்மட்ட தலிபான் கைதிகளை விடுவிக்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை நிறைவடையும் என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரம் தாமதமாகிவிட்ட செயல்முறை இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தலிபான் வட்டாரம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மூத்த ஹக்கானி கிளர்ச்சித் தலைவர்களான அனாஸ் ஹக்கானி, அதே போல் தலிபான் தளபதிகள் ஹபீஸ் அப்துல் ராஷீட் மற்றும் மாலி கான் ஆகியோரை விடுவிப்பதாக அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

பரிமாற்றம் கடந்த வாரம் நடைபெறவிருந்தது, ஆனால் சில அறியப்படாத காரணங்களால் தாமதமானது.

அமெரிக்க பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை உள்ளிட்ட வெளி விவகாரங்களை மேற்கொள்வதற்காக, தலிபான் கத்தார் தோஹாவில் தனது அலுவலகத்தை பராமரிக்கிறது.