நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஒரு தவணை அரசாங்கமாக ஆகுவதைத் தடுப்பது மிக முக்கியமானது என்று அவர் விளக்கினார்.
“முதலாவதாக, நாம் செயல்படுத்தி வரும் வியூகங்கள், நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கை, தலைமை பிரச்சனைகள் கவனிக்கப்படும். நாளை (புதன்கிழமை) நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்துவோம். நான் ஓர் அறிக்கையை முன்வைப்பேன். எங்களுக்கு ஒரு புதிய திசை கிடைக்கும். மேலும் பல பகுதிகளில் முக்கியமான மாற்றங்களுக்கு இது தேவைப்படும்” என்றும் மொகிதின் தெரிவித்தார்.
“நம்பிக்கைக் கூட்டணியில் ஒற்றுமை, மக்களுக்கான மேலும் நடைமுறைக் கொள்கைகளை செயல்படுத்துவது, பொருளாதார மேம்பாடு ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்” என்றும் மொகிதின் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கூறினார்.